ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் மத்திய பீடபூமி மாகாணம் மங்கு மாவட்டத்தில் பங்சாய் மற்றும் குபாட் ஆகிய கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள விவசாயிகளுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது.
இந்த மோதல் முற்றியதில் அது வன்முறையாக மாறியது. இதனையடுத்து இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.
அப்போது சிலர் துப்பாக்கி எடுத்து சுட ஆரம்பித்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று கலவரத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். இதனால் அங்கு சண்டையிட்டு கொண்டிருந்த பலர் தலைமறைவாகினர்.
இந்த கலவரத்தில் இரு தரப்பை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.