ரஷ்யா மீது புதிய தடைகளை அறிவித்துள்ளது கனடிய பிரதமர் ஜஸ்டின் இந்த தடைகள் குறித்து அறிவித்துள்ளார்.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் தற்பொழுது நடைபெற்ற வரும் ஜி 7 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள கனடிய பிரதமர் இந்த தடை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா மீது புதிதாக எழுவது தடைகள் விதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா சட்டவிரோதமான முறையில் உக்ரைன் மீது படையெடுத்துள்ளதாகவும் இந்த சட்டவிரோத ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நபர்கள் நிறுவனங்கள் என்பனவற்றுக்கு எதிராக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.