ஈரானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
3 மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு போன்றவற்றை நடத்தினர். எனவே போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடந்தது.
இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 15 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து வெளிநாடுகளிலும் ஈரான் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்தது. அதன்படி வெளிநாடுகளில் உள்ள ஈரான் தூதரகங்களுக்கு முன்பாக அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனால் இந்த போராட்டம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. எனவே போராட்டத்தை ஒடுக்குவதற்காக ராணுவத்தை பயன்படுத்தக்கூடாது என ஐ.நா. சபை ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும் உலக நாடுகளும் ஈரானுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தன.