பசிபிக் சமுத்திரத்தில் நியூ கலிடோனியாவுக்கு அருகில் இன்றும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன் நியூ கலிடோனியா தீவுகளுக்கு கிழக்கே 300 கிலோமீற்றர் தூரத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க பூகோள அளவையியல் நிறுவகம் தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் (19) குறித்த பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதுடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது