ரஷ்யாவுக்குள் நுழைய அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா உட்பட அமெரிக்ககர்களுக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
மேலும், உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்ததால் அமெரிக்கா மீது ரஷ்யா இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக, ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெளிவுப்படுத்தி உள்ளது.
அதன்படி, அமெரிக்காவுக்குள் நுழைய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் அமெரிக்க தூதர் ஜான் ஹன்ட்மேன் அமெரிக்க சபையின் அடுத்த தலைவர் என எதிர்பார்க்கப்படும் சார்லஸ் க்யூ ப்ரோன், அமெரிக்க செனட்டர்கள், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மேல், கோல்பர்ட், சேத் மியர்ஸ், உள்பட 500 பேர் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோபைடன் தலைமையிலான அரசு ரஷ்யாவுக்கு எதிராக சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.