Home கனடா அல்பர்ட்டா முதல்வருக்கு எதிராக குற்றச்சாட்டு

அல்பர்ட்டா முதல்வருக்கு எதிராக குற்றச்சாட்டு

by Jey

அல்பர்ட்டா மாகாண முதல்வர் டெனியல் ஸ்மித் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக ஸ்மித் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அல்பர்ட்டா மாகாணத்தின் ஒழுக்க விதி ஆணையாளரினால் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கல்கரியில் வீதியில் போதனைகளில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவரின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மாகாண நீதி அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபருடன் முதல்வர் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்மித்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி சட்ட மா அதிபர் மாகுரைட் ட்ரஸ்லரினால் ஆரம்பிக்கப்பட்டது.
பாவ்லோவ்ஸ்கீ என்னும் போதகருக்காக கூடுதல் கரிசனை எடுத்துக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விசாரணைகளில் தலையீடு செய்யவில்லை என்ற போதிலும், நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஒருவர் தொடர்பில் நீதி அமைச்சர் மற்றும் சட்ட மா அதிபருடன் கலந்துரையாடுவது பொருத்தமற்றது என சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் டெனியல் ஸ்மித் சட்ட மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமுத்தப்பட்டுள்ளது.

related posts