ஹீரொஸிமா நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஜி7 நாடுகளின் தலைவர்களது 49ஆவது மாநாடு நாளை வரை இடம்பெறவுள்ள நிலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் நடுத்தர வருமான நாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான எதிர்கால பலதரப்பு முயற்சிகளுக்கு ஒரு வெற்றிகரமான முன்மாதிரியாக விரைவான தேர்வு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஜி7 குழுவின் தலைவர்கள், ஹிரோஷிமாவில் நேற்று (19) ஆரம்பமான உச்சிமாநாட்டில் சந்தித்தனர், மேலும் கடன் நிலைத்தன்மைக்கான சவால்களை எதிர்கொள்ளும் அவர்களின் கூட்டு அறிக்கையில்,
பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று இணைத்தலைவர்களின் கீழ் இலங்கைக்கான கடனாளிகள் கூட்டத்தைத் தொடங்கியுள்ளதை அவர்கள் வரவேற்றுள்ளதோடு நடுத்தர வருமான நாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான எதிர்கால பலதரப்பு முயற்சிகளுக்கு வெற்றிகரமான முன்மாதிரியாக விரைவான தீர்வை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்தார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர் மற்றும் பரந்த உலகளாவிய சவால்களால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் விகிதாச்சாரத்தில் பாதிக்கப்படுகின்றன.
இந்த நாடுகளில் உள்ள கடன் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான அவசரத் தேவையை நாங்கள் மீண்டும் வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.