Home இலங்கை கனேடிய பிரதமர் வெளியிட்ட அறிக்கைக்கு கண்டனம்

கனேடிய பிரதமர் வெளியிட்ட அறிக்கைக்கு கண்டனம்

by Jey

இலங்கையில், 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் குறித்து கனேடிய பிரதமர் வெளியிட்ட அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளமை சிறுபிள்ளைத்தனமான செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், கனேடிய பிரதமர் இனவழிப்பு தொடர்பில் ஓர் அறிக்கையை முன்வைத்துள்ளார்.

இனவழிப்பு தொடர்பில் 14 ஆண்டுகள் கடந்தும் ஓர் நாடு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது என்பது ஆராய்ந்து பார்க்க வேண்டிய விடயமாகும்.

அதை விடுத்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் கனேடிய பிரதமர் விடுத்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கனேடிய பிரதமரின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதை விடுத்து எமது மக்களின் பிரச்சினைகளுக்கான நீதியை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் கனேடிய பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் கோட்டாபயவிற்கு பாதிப்பு ஏற்பட கூடாது எனும் வகையில் அலி சப்ரி செயற்படுகின்றார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

related posts