Home இந்தியா 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகள்

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகள்

by Jey

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நாணயத்தாள்களை மாற்ற எந்த ஆவணமும் தேவை இல்லை என எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நாணயத்தாள்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

23ம் திகதி முதல் வங்கிகளில் நாணயத்தாள்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நாணயத்தாள்களை செப்டம்பர் 30ம் திகதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது.

அது மட்டும் இன்றி, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது.

இந்நிலையில், 2000 ரூபாய் நாணயத்தாள்களை மாற்ற எந்த ஆவணமும் தேவை இல்லை என்று எஸ்.பி.ஐ வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

related posts