சீன அரசாங்கத்தினால் இலங்கை கடற்தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் நாளை(23.05.2023) முதல் விநியோகிக்கப்படும் என கடற்றொழில் அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய நாளை காலை 08.00 மணிக்கு பாணந்துறை மீன்பிடி துறைமுகத்தில் இலவசமாக மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மற்றும் இலங்கை சீனத் தூதுவர் வெய் ஷென் ஹொங் ஆகியோரின் தலைமையில் இது நடைபெறவுள்ளது.
இதன்போது 26,000 படகுகளுக்கு 150 லிட்டர் வீதம் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.