உக்ரைனுக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.
ஜீ7 தலைவர்கள் மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற கனடிய பிரதமர் அங்கு உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்திருந்தார்.
இந்த சந்திப்பின் போது கனடா தொடர்ச்சியாக உக்கிரேனுக்கு ஆதரவுகளை வழங்கும் என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கும் உக்கிரேனுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது அவசியம் அற்றது எனவும் அங்கு நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் ஆரம்பமானது முதல் கனடிய அரசாங்கம் பல்வேறு வழிகளில், ராணுவ ரீதியாகவும் நிதி ரீதியாகவும் உக்கிரனுக்கு ஆதரவுகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கனடிய மக்களும், அரசாங்கமும் பிரதமரும் உக்ரைனுக்கு வழங்கி வரும் ஆதரவு பாராட்டுக்குரியது எனவும் அதற்காக, தாம் நன்றி பாராட்டுவதாகவும் உக்கிரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்