தனது மூன்று வயதான மகனை தூக்கி நிலத்தில் அடித்ததாக கூறப்படும் நபரை தாம் அவிசாவளை இஹல தல்துவ பிரதேசத்தில் இன்று கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவளை இஹல தல்துவ தோட்டத்தை சேர்ந்த இந்த நபர் பிள்ளையை நிலத்தில் அடித்த பின்னர் மனைவிக்கு எதிரில் சென்று விஷம் குடித்துள்ளார். பிரதேசவாசிகள் இணைந்து சந்தேக நபரையும் பிள்ளையையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை முடிந்து தப்பிச் செல்லும் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான சிறுவனின் தலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் கண்களில் இரத்தம் வெளியேறியுள்ளது. அவசர சிகிச்சைகளை மேற்கொண்ட அவிசாவளை வைத்தியசாலை மருத்துவர்கள் மேலதிக
சிகிச்சைக்காக சிறுவனை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.