உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த சண்டை நீடித்து வருகிறது.இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது.
கிழக்கு உக்ரைனின், முக்கிய நகரான பக்முத்தை கைப்பற்ற ரஷ்ய படைகள் 8 மாதங்களாக சண்டையிட்டு வந்த நிலையில் பக்முத்தை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா நேற்று தெரிவித்தது.
ஹிரோஷிமாவில் ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் நேற்று இது பற்றி நிருபர்கள் கேட்ட போது,‘‘பக்முத் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றவில்லை’’ என்று தெரிவித்தார்.