Home இலங்கை எதிர்கால அரசியலை உறுதிப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்

எதிர்கால அரசியலை உறுதிப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்

by Jey

ரணில் விக்ரமசிங்கவுக்கு பின்னர் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ரவி கருணாநாயக்கவை தவிர வேறு மாற்று இல்லை என நல சிஹல உறுமய கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார்.

ரவி கருணாநாயக்க என்பவர் படித்த, புத்திசாலியான, ஒழுங்கம் நிறைந்த, நேர்மையான அரசியல் தலைவர். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அடுத்து அந்த கட்சியில் அவரே அடுத்த நிலையில் உள்ளார்.

இதனால், ரவி கருணாநாயக்கவுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவி அல்லது உயர் பதவி வழங்கி முன்நோக்கி கொண்டு வந்து கட்சியின் எதிர்கால அரசியலை உறுதிப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ரவி கருணாநாயக்கவுக்கு ஐக்கிய தேசியக்கட்சியில் உயர் பதவியை வழங்கினால், நவ சிஹல உறுமய உட்பட அரசியல் கட்சிகள், குழுக்கள், அரசியல் அமைப்புகள் கட்சியில் இணைய தயாராக இருக்கின்றன.

ரவி கருணாநாயக்கவுக்கு தேசிய மற்றும் சர்வதேச தொடர்புகள் இருக்கின்றன. அனைத்து இன மற்றும் மதங்களை சேர்ந்தவர்கள் அவருடன்

related posts