கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமராக பதவி வகித்து 8 ஆண்டுகள் கடக்கும் நிலையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 விதமான மக்கள் பிரதமரை அங்கீகரிக்கின்றனர் என்ற போதிலும் 50% மேற்பட்ட கனடியர்கள் பிரதமரின் செயல்பாடுகளை அங்கீகரிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 16 கனடியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயங்கள் தெரிய வந்துள்ளன.
எவ்வாறெனினும் முன்னாள் பிரதமர்கள் பலருக்கு எட்டு ஆண்டுகளின் பின்னர் காணப்பட்ட ஆதரவினை விடவும் ட்ரூடோவிற்கு கூடுதல் ஆதரவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமரின் தந்தையான பியே எலியோட் ட்ரூடோவை விடவும் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு கூடுதல் ஆதரவு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.