வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் 2-வது பகுதியாக பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு நேற்று மாலை சென்றார். அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அவரை வரவேற்றார்.
பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படியும் வரவேற்பு வழங்கப்பட்டது. இதன்பின்னர், இருவரும் சிட்னி நகரின் குடோஸ் பேங்க் அரீனா பகுதிக்கு சென்றடைந்தனர்.
அந்த பகுதியில் இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.
அவர் பேசும்போது, உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு பிரகாசம் வாய்ந்த பகுதியாக சர்வதேச நிதியகம் இன்று கருதுகிறது.
உலகளாவிய சிக்கலுக்கு யாரேனும் சவால் விடுகிறார்களா? என்றால் அது இந்தியாவே என உலக வங்கி நம்புகிறது.
பல்வேறு நாடுகளில் வங்கி நடைமுறை இன்று சிக்கலில் உள்ளது. ஆனால், மறுபுறம் இந்திய வங்கிகளின் வலிமை ஒவ்வொரு பகுதியிலும் பாராட்டப்படுகிறது என கூறியுள்ளார்.