Home உலகம் அமெரிக்காவில் ஒன்றன்பின் ஒன்றாக கார்கள் மோதி விபத்து

அமெரிக்காவில் ஒன்றன்பின் ஒன்றாக கார்கள் மோதி விபத்து

by Jey

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரம் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

சன்னிவேல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைதடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதியது.

அந்த நேரத்தில் லாரிக்கு பின்னால் தொடர்ந்து 5 கார்கள் வந்து கொண்டிருந்தன. நள்ளிரவு நேரம் சாலை மயானம் போல வெறிச்சோடி காணப்பட்டதால் அந்த கார்கள் வேகமாக வந்து கொண்டிருந்தன.

இதனால் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளான லாரி மீது முதலில் 4 கார்கள் மோதின.

இதனையடுத்து அந்த காரில் இருந்தவர்கள் உடனடியாக அதில் இருந்து இறங்க முற்பட்டனர்.

ஆனால் பின்னால் வந்த மற்றொரு கார் அவர்கள் மீது மோதியது. இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக ஆடுகள் குழிக்குள் விழுவது போல அடுத்தடுத்து கார்கள் விபத்துக்குள்ளாகின

related posts