தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தில் உயிரிழந்த படையினர், உள்ளிட்ட அனைவரையும் நினைவுகூரும் வகையில் “நினைவுத்தூபி” ஒன்றை அமைக்க அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தை நல்லிணக்கம் என்று கூறக்கூடாது, இதற்குப் பெயர் கோழைத்தனம் என முன்னாள் அமைச்சரும், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இந்த செயல் பெரும் வெட்கக் கேடானது எனவும் அவர் அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளார்.
அத்துடன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த முப்படையினரையும், பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளையும் எவ்வாறு சம நிலையில் பார்க்க முடியும்?
நாட்டில் அரசியலமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒருமைப்பாட்டை பாதுகாக்கவே முப்படையினர் போராடினார்கள். விடுதலை புலிகள் நாட்டைப் பிரிக்க போராடினார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.