தமிழ் நாட்டின் தூத்துக்குடி பிரதேசத்தில் 20 கிலோ கிராம் எடை கொண்ட திமிங்கிலத்தின் அம்பரை (வாந்தி) 30 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த இரண்டு இலங்கையர்களுடன் நான்கு பேர் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பரின் உரிமையாளர் நீர்கொழும்பை சேர்ந்தவர் அவர் மற்றுமொரு நபருடன் அதனை விற்பனை செய்ய இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
இந்தியாவில் இரண்டு தரகர்களுடன் இணைந்து அம்பரை நேற்று முன்தினம் விற்பனை செய்ய முயற்சித்த போது தூத்துக்குடி பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
இந்தியாவின் திமிங்கிலத்தின் அம்பரை பயன்படுத்தி வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுவதுடன் அவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால், அம்பருக்கு இந்தியாவில் சிறந்த கேள்வி நிலவுவதுடன் அதிக விலைக்கு அவை கொள்வனவு செய்யப்படுகின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த தூத்துக்குடி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.