இந்தியாவில் 17 வயது சிறுமி 33 வயது நபரிடம் பணத்துக்காக விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தானை சேர்ந்த 17 வயதான ஷாம்லியை அவரின் குடும்பத்தார் 33 வயது நபருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
இதற்காக அந்த நபர் சிறுமியின் குடும்பத்தாருக்கு பணம் கொடுத்துள்ளார்.இதன்பின்னர் அடுத்த மூன்று நாட்கள் இரவு நேரங்களில் சிறுமியை அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார்.
நான்காவது நாள் அங்கிருந்து தப்பிய ஷாம்லி சிறார்கள் உதவி மைய அதிகாரிகளை தொடர்பு கொண்டார்.இதையடுத்து பொலிஸார் உதவியுடன் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.