Home இந்தியா மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

by Jey

உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-31-ம் நிதி ஆண்டுக்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு மேம்பட செய்வதை லட்சிய இலக்காக கொண்டு தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது.

இதில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தொழில் அதிபர்களை பங்கேற்க செய்யவும், புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக சிங்கப்பூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று டமாசெக், செம்ப்கார்ப், கேப்பிட்டா லேண்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள் மற்றும் சிங்கப்பூர் மந்திரி ஈஸ்வரனையும் சந்தித்து பேசினார்.

இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின.

related posts