அமெரிக்காவின் கணவர் திடீரென மாரடைப்பால் இறந்து போனதை தாங்கிக்கொள்ள முடியாத பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தின் ஆம்பர்பேட்டையில் நேற்று நடந்துள்ளது.
ஆம்பர்பேட்டை டி.டி.கொலனியை சேர்ந்த 29 வயதான சாஹிதி என்ற பெண்ணுக்கும் வனஸ்தலிபுரண்ணாவை சேர்ந்த கணனி பொறியியலாளரான 31 வயதான மனோஜ் என்பவருக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.
திருமணத்திற்கு பின்னரும் இருவரும் அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்கு சென்று அங்கு வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2 ஆம் திகதி பெற்றோரை பார்ப்பதற்காக சாஹிதி அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் இருந்த மனோஜ் கடந்த 20 ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
சடலம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு நேற்று முன்தினம் இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளதுடன் சாஹிதியும் இறுதிச் சடங்கிற்கு சென்று விட்டு இரவு பெற்றோருடன் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.
சாஹிதி தனது சகோதரியின் அறையில் இரவு உறங்கியுள்ளதுடன் காலையில் சகோதரின் குளியலறைக்கு சென்ற பின்னர், சேலையை பயன்படுத்தி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரும் உறவினர்களும் தூக்கில் தொங்கிய சாஹிதியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து ஆம்பர்பேட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்