Home உலகம் அந்தாட்டிக்காவில் மிகப் பெரிய ராட்சத சுனாமி

அந்தாட்டிக்காவில் மிகப் பெரிய ராட்சத சுனாமி

by Jey

காலநிலை மாற்றங்கள் காரணமாக அந்தாட்டிக்காவில் மிகப் பெரிய ராட்சத சுனாமி ஏற்படக்கூடும் என புதிய ஆய்வொன்றின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வு சம்பந்தமான அறிக்கை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் இதனை கூறியுள்ளன.

அந்தாட்டிக்காவில் கடலுக்கு அடியில் ஏற்படும் நிலச்சரிவு காணரமாக பூமியின் தென் பகுதி கடலில் மிகப் பெரிய ராட்சத சுனாமி ஏற்படக்கூடும் என ஆய்வின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுனாமி அளவு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இப்படியான சுனாமி ஏற்பட்டதற்கான சான்றுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தென் அமெரிக்கா, நியூசிலாந்தில் இருந்து தென்கிழக்காசிய வரை அந்த ராட்சத சுனாமி பேரலை ஏற்பட்டிருந்தாக கூறப்பட்டுள்ளது.

அதேவேளை சுனாமி ஏற்படுவதை கண்டறிந்து எச்சரிக்கை விடுப்பதற்கான தொழிற்நுட்பத்தை மேலும் மேம்படுத்த வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 

related posts