இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நள்ளிரவில் தனுஷ்கோடிக்கு வருகை தந்துள்ளனர்.இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அவ்வபோது அந்நாட்டை சேர்ந்த மக்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வருகின்றனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை 250-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கு வந்தார்கள்.இந்த நிலையில் நேற்று மேலும் 3 பேர் தனுஷ்கோடிக்கு வந்தனர்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜிம்ஸ்ரிவ் என்ற விஜயன்(46), அவரது மனைவி ராஜினி(45), மகள் திபேந்தினி (18) ஆகிய மூவரும் நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து படகு மூலம் புறப்பட்டு நள்ளிரவு தனுஷ்கோடி பகுதியில் உள்ள கோதண்டராமர் கோயில் கடற்கரை பகுதியில் வந்திறங்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் மூவரையும் மீட்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.