Home இந்தியா டெல்லியில் ஆம் ஆத்மியுடன் எந்த கூட்டணியும் இருக்க கூடாது

டெல்லியில் ஆம் ஆத்மியுடன் எந்த கூட்டணியும் இருக்க கூடாது

by Jey

டெல்லியில் கெஜ்ரிவால் அரசுக்கு எதிரான மத்திய அரசின் அவசர சட்ட விவகாரம் சூடு பிடித்து உள்ளது. கெஜ்ரிவால் பல மாநில தலைவர்களை சந்தித்து பேசி தனக்கான ஆதரவை திரட்டி வருகிறார்.

இந்நிலையில், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன், அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று சந்தித்து பேசினார்.

இதில், டெல்லியில் ஆம் ஆத்மியுடன் எந்த கூட்டணியும் இருக்க கூடாது என காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

மத்திய அரசின் அவசர சட்ட விவகாரத்திலும் ஆம் ஆத்மிக்கு துணையாக காங்கிரஸ் நிற்க கூடாது என அவர்கள் கார்கேவிடம் கூறியுள்ளனர். எனினும், இத்ந விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரங்களை கட்சி தலைமையிடமே அவர்கள் விட்டு உள்ளனர்.

இதற்கு முன் ஆம் ஆத்மியின் தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறும்போது, அவசர சட்ட விவகாரம் ஒட்டுமொத்த நாட்டுடன் தொடர்புடையது. காங்கிரசின் தேசிய தலைமை, மாநில பிரிவுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக சொந்த முடிவை எடுக்க வேண்டும் என கூறினார்.

related posts