பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் ‘தெக்ரிக்-இ-இன்சப்’ கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது தேசதுரோகம், ஊழல் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, ஊழல் வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் இம்ரான்கானை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக லாகூர் கோர்ட்டில் ஆஜராக வந்த இம்ரான்கானை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டதையடுத்து இம்ரான்கான் விடுதலை வழங்கப்பட்டார். தற்போது இம்ரான்கான் ஜாமினில் உள்ளார்.
இம்ரான்கானை கைது செய்ததை கண்டித்து மே 9ஆம் தேதி போராட்டம் நடத்திய கட்சியின் பெண் நிர்வாகிகளுக்கு சிறையில் பாலியல் தொல்லை அளிக்கபடுவதாக இம்ரான் கான் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.