ரொறன்ரோவில் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் சுற்றாடல் திணைக்களம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
ரொறன்ரோவில் இந்த ஆண்டில் நிலவிய மிக அதிகளவு வெப்பநிலை எதிர்வரும் நாட்களில் பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏழு நாட்களில் பகல் நேரத்தில் 26 முதல் 29 பாகை செல்சியஸ் வரையில் வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமையாக ஆண்டின் இந்தப் பகுதியில் நிலவும் வெப்பநிலையை விடவும் கூடுதல் அளவில் வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் 15 முதல் 17 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.