இலங்கையில் சிலர் மத பதற்றத்தைத் தூண்டும் வகையில் வெளியிடும் கருத்துக்களின் பின்னணியில் அரசியல் நோக்கங்களாக இருக்கலாம் என கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.
மதங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு மதங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் அண்மை நாட்களில் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பின்னணியிலேயே, இல்லத்தின் ஊடக பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிருசாந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், “இலங்கையில் அண்மை நாட்களில் மதங்களுக்கும் அதன் படிப்பினைகளுக்கும் எதிராக பல்வேறு தரப்பினரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.