சிங்கப்பூரில் உள்ள கோவிலில் தொடர் மோசடியில் ஈடுபட்ட அர்ச்சகருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சைனா டவுனில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் முக்கியமான ஒன்றாகும்.
இது கடந்த 1827ஆம் ஆண்டு கட்டப்பட்டது.சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதித் திருவிழா இக்கோயில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில்தான் நடைபெறுகிறது.
இந்த கோவிலின் தலைமை குருக்கள் பொறுப்பில் சிவஸ்ரீ கந்தசாமி சேனாபதி என்பவர் இருந்தார். இவர் கோவில் நகைகளை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
அதன்படி 2016ல் இருந்து 2020 வரையில் 14.2 கோடி ரூபா அளவுக்கு மோசடி செய்திருக்கிறார்.தற்போது முழு நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.அவர் மீது பண மோசடி செய்தது, ஏமாற்றியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம் கந்தசாமிக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது