யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்ட 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்றையதினம் (31.05.2023) அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
அனுஷ்டிப்பில் கலந்துகொண்ட பொதுமக்கள் இந்த யாழ்.பொதுநூலக எரிப்பானது தமிழ் இன அழிப்பின் ஒரு வடிவம் என தெரிவித்துள்ளனர்.1981 மே 31 அன்று சிங்களப் பேரினவாத கும்பலினால் யாழ்.பொதுசன நூலகத்தைத் திட்டமிட்டு கொளுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதி திரும்பப் பெற முடியாத வகையில் எரிந்து சாம்பலாகிப் போனது.இருபதாம் நூற்றாண்டின் இன, பண்பாட்டு அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படும் யாழ்ப்பாண நூலக எரிப்பு நடந்து இன்றோடு 42 ஆண்டுகள் ஆகின்றமை குறிப்பிடத்தக்கது.