பெற்றோலின் விலையை குறைப்பது மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தி முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ளதாக சில முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி முச்சக்கரவண்டிக்கான கட்டணம் முதல் கிலோமீற்றருக்கு 100 ரூபாவாகவும் இரண்டாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாவாகவும் திருத்தம் செய்யப்படவுள்ளதாக முச்சக்கரவண்டி தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான முச்சக்கர வண்டிகள் தற்போது முதல் கிலோ மீற்றருக்கு 120 ரூபாயும், இரண்டாவது கிலோமீட்டருக்கு 100 ரூபாயும் வசூலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.