Home இலங்கை முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

by Jey

பிறருக்கு சொந்தமான வாகனத்தின் பாகங்களை கழற்றி தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டை எதிர்நோக்கி முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

பூஜித் ரூபசிங்க என்ற முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி மற்றும் 2010 ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதிக்கு இடையிலான காலத்தில் கொள்ளுப்பிட்டியில் உள்ள காணி மற்றும் வீட்டை போலி காணி உறுதிப்பத்திரத்தை தயாரித்து விற்பனை செய்தமை மற்றும் வாகனத்தை கொள்ளையிட்டு அதனை பாகங்களாக கழற்றி தன்வசம் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணைகளின் பின்னர் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, போலி காணி உறுதிப்பத்திரத்தை தயாரித்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து குற்றவாளியை விடுதலை செய்வதாக கூறினார்.

போலி காணி உறுதிப்பத்திரத்தை தயாரித்த சம்பவத்துடன் தொடர்புடைய புளத்சிங்களகே குணசிங்க என்ற நபர் சம்பந்தமாக விசாரணை நடத்தாது தொடர்பாக கடும் அதிருப்தியை வெளியிட்ட நீதிபதி, பொலிஸாரின் இந்த செயல் குறித்து நீதிமன்றம் கவலையடைவதாக கூறியுள்ளார்.

எனினும் வாகனத்தை திருடி தன்வசம் வைத்துக்கொண்ட குற்றத்திற்கு குற்றவாளிக்கு தண்டனை வழங்குவதாக கூறிய நீதிபதி, குற்றவாளிக்கு கடூழிய சிறைத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

related posts