Home கனடா கனேடியர்களுக்கு எச்சரிக்கை சிப்பி உணவில் நோய்க்கிருமிகள்

கனேடியர்களுக்கு எச்சரிக்கை சிப்பி உணவில் நோய்க்கிருமிகள்

by Jey

கனேடியர்களுக்கு பிடித்த உணவான சிப்பி வகை உணவொன்றில் நோய்க்கிருமிகள் குறித்த எச்சரிக்கை செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

ஆய்ஸ்டர்ஸ் எனப்படும் சிப்பி உணவில் விப்ரியோ (Vibrio parahaemolyticus) என்னும் நோய்க்கிருமி காணப்படும் அபாயம் குறித்து உணவு பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பருவநிலை ஆர்வலர்கள் இன்னமும் எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அவர்களை கைது செய்யும் நிலை கூட உருவாகியுள்ளதே தவிர, அவர்கள் சொல்வதை யாரும் கேட்பதுபோல் இல்லை.

கடைசியில் அவர்கள் எச்சரித்த விடயம், சாப்பாட்டு மேசையில் வைக்கப்பட்டுள்ள உணவுத் தட்டு வரைக்கும் வந்துவிட்டது.

ஆம், விப்ரியோ என்பது, கடல் நீரில் காணப்படும் ஒரு வகை பாக்டீரியா ஆகும். பருவநிலை மாற்றத்தால் கடலின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த விப்ரியோவின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

ஆக, இதற்கு முன் பொதுவாக காணப்படாத இடங்களுக்கும் இந்த விப்ரியோ கிருமி பரவிவருகிறது. இந்த விப்ரியோ கிருமி, கனேடியர்கள் விரும்பி உண்ணும் ஆய்ஸ்டர்கள் என்னும் சிப்பி வகை உணவில் காணப்படும் அபாயம் உள்ளது.

 

related posts