Home உலகம் ஜோர்டானின் பட்டத்து இளவரசரின் திருமணம்

ஜோர்டானின் பட்டத்து இளவரசரின் திருமணம்

by Jey

ஜோர்டானின் பட்டத்து இளவரசர் ஹுசைன் பின் அப்துல்லாவுக்கும், சவுதி அரேபிய கட்டட கலைஞர் ராஜ்வா அல் சைஃபபுக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணம் ஜோர்டானின் தலைநகர் அம்மானில் உள்ள சஹ்ரான் அரண்மனையில் நடைபெற்றது.

மணமகள் ராஜ்வா அல் சைஃப் நேர்த்தியான வெள்ளை நிற ஆடையை அணிந்து, பட்டத்து இளவரசரின் மறைந்த பெரிய பாட்டிக்காக 1968 ஆம் ஆண்டு தனிப்பயனாக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் V காரில் சஹ்ரான் அரண்மனைக்கு வந்தார்.

அதன்படி 2009 ஆம் ஆண்டில் மன்னர் அப்துல்லாவின் வாரிசாக அறிவிக்கப்பட்ட இளவரசர் ஹுசைன் ஒரு முக்கிய குடும்பத்தைச் சேர்ந்த சவூதி கட்டடக் கலைஞர் ராஜ்வா அல் சைஃப்உடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணத்தில் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் மன்னர்கள், ராணிகள், இளவரசிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவர் மனைவி கேட் மிடில்டன், அமெரிக்காவின் முதல் பெண் ஜில் பைடன் உள்ளிட்ட 140 விருந்தினர்கள் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.

 

 

 

 

 

 

 

related posts