காலநிலை மாற்றம் காரணமாக கனடா இயற்கை பேரழிவுகளை சந்திக்க நேரிடும் சர்த்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் காலநிலையில் பாரியளவு மாற்றங்கள் பதிவாகி வருகின்றன.
இந்த நிலையில் கனடாவில் வெள்ளம் மற்றும் வறட்சி நிலைமைகளை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியங்கள் வெகுவாக காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை முகவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்பத்துடனான காலநிலையினால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.