ஒன்றாரியோ லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் யாசீர் நாவக்வி போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஒட்டாவாவில் யாசீர் தனது பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார்.
ஒட்டவா மத்திய தொகுதி லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றும் யாசீர், தலைமைப் பதவி போட்டி குறித்த அதிகாரபூர்வ ஆவணத்தை சமர்ப்பித்துள்ளார்.
மாகாணத்தில் கட்சியின் பின்னடைவை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
கட்சியை கடந்த கால நிலைக்கு திருப்ப வேண்டுமாயின் அனுபவம் மிக்க ஒருவரிடம் பொறுப்பு ஒப்படைக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
யாசீ நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.