Home இந்தியா மக்களை தேடி மருத்துவ திட்டம்

மக்களை தேடி மருத்துவ திட்டம்

by Jey

திருப்பத்தூர் நகராட்சி ஈத்காமைதானம் பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்து, மருந்து பெட்டகத்தை வழங்கினார்.

இத்திட்டத்தின்கீழ் 110 இடைநிலை சுகாதார பணியாளர்கள், 164 பெண் சுகாதார தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் நகரங்கள் மற்றும் கிராமங்களில் வீடுகளிலேயே தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

5.8.2021 முதல் 1.6.2023 வரை மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 18 வயதிற்கு மேற்பட்ட 9,24,125 பேருக்கு தொற்றா நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

related posts