Home Uncategorized ஒடிசா ரயில் விபத்தில் வதந்திகளை பரப்பி வருகின்ற ஒரு கும்பல்

ஒடிசா ரயில் விபத்தில் வதந்திகளை பரப்பி வருகின்ற ஒரு கும்பல்

by Jey

ஒடிசா ரயில் விபத்தின் துயரம் அடங்கும் முன் அதை வைத்து ஒரு கும்பல் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் வதந்தி பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒடிசா பொலிஸ் அறிவித்துள்ளது.

விபத்து நடந்த காணொளி என்று சில பழைய காணொளிகள் வைலரலாகியுள்ளது. இந்த ரயில் விபத்துக்கும் வைரலாகும் காணொளிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒடிஷா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதுவரை மொத்தம் 294 பேர் பலியாகி உள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் உதவிகளை பெற்று கொள்ள 044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் அறியலாம்.ரயில் விபத்து தொடர்பாக உதவி பெற 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ள முடியும்.

related posts