கனடாவில் சிறுமிகளுக்கு போதை மருந்து கொடுத்து அவர்களை ஆபாச படம் எடுத்த இந்தியா வம்சாவழி தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்
56 வயதான குர்பர்தாப் என்பவரும், அவரின் மகனான 24 வயது சும்ரித் வலியா என்பவருமே இந்த கொடிய செயலில் ஈடுபட்டுள்ளனர்.13 வயது சிறுமி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் மாயமானார், பின்னர் அவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் சும்ரித்துடன் தான் தொடர்பில் இருந்ததாக தெரிவித்தார்.சிறுமிக்கு மது, போதைப்பொருளை கொடுத்த சும்ரித் அதற்கு பதிலாக அவருடன் உறவு கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த இடத்தில் வைத்து தான் பல டீன் ஏஜ் பெண்கள், சிறுமிகளுக்கு போதை மருந்து கொடுத்து சீரழித்துள்ளனர்.இந்த சம்பவங்கள் டிசம்பர் 2022ல் இருந்து மே 2023-க்கு இடையில் நடந்ததாக நம்பப்படுகிறது.விசாரணைக்கு பின் இருவரும் மிக அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களது நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சிறுவர் ஆபாசப் படங்கள் அடங்கிய கணினி, போதைப் பொருட்கள், தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது.
இருவர் மீதும் சிறார்களுடன் உறவு வைத்தல், பாலியல் சுரண்டல், பாலியல் வன்கொடுமை, சிறார்கள் ஆபாச படங்களை உருவாக்குதல் போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது