கோவிட்19 பெருந்தொற்று பரவிய காலப் பகுதியில் அரசாங்கம், மக்களின் தனியுரிமையை மீறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் தனியுரிமை ஆணையாளர் பிலிப் டுப்பெரன்ஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கட்டாய தடுப்பூசி, செல்லிடப்பேசி பின்தொடர்வு, அரைவ் கென் செயலி போன்றவற்றின் பயன்பாட்டினால் மக்களின் அந்தரங்கத் தரவு தனியுரிமைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர அரசாங்கத்தின் கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தனியுரிமை சட்டங்களுக்கு அமைவானது என தெரிவித்துள்ளார்.
கோவிட் காலத்தில் அரசாங்கம் மக்களின் தனியுரிமையை மீறியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டதில், பொதுமக்களின் தனியுரிமைக்கு குந்தகம் ஏற்படுமாறு அரசாங்கம் செயற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.