யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் 10 வயது சிறுவன் ஒருவன் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்திய சந்தர்ப்பத்தில் பேதுருதுடுவ பொலிஸார் நேற்று (04) கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறுவனை கண்டுபிடித்து பரிசோதித்த போது, அவர் ஹெரோயின் பயன்படுத்தியுள்ளதுடன், அவரிடம் இருந்து மற்றுமொரு ஹெரோயின் பாக்கெட்டை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
தன்னை விட வயதில் மூத்தவர்களுடன் ஹெரோயின் பாவனையில் ஈடுபடும் பழக்கம் உள்ளதால் இந்த சிறுவன் பாடசாலைக்கு செல்வதை நிறுத்திவிட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.