வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட இருவரும் தற்போது தொற்று நோய் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் இருந்து நாடு திரும்பிய தாய் மற்றும் மகள் ஆகிய இருவருக்கும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்த போது குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்.இதனால், அவரிடம் இருந்து பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் காணப்பட்டால் உடனே சிகிச்சைகளை பெற்று கொள்ளுமாறு வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.