Home இந்தியா தாய் கண்டித்ததால் சகோதரிகள் தற்கொலை

தாய் கண்டித்ததால் சகோதரிகள் தற்கொலை

by Jey

தமிழகத்தில் காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் கிணற்றில் குதித்து அக்கா, தங்கை இருவரும் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிச்சை – அகிலாண்டேஸ்வரி தம்பதிக்கு 21 வயதில் வித்யா மற்றும் 20 வயதில் காயத்ரி என இரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இவர்கள் 2 பேரும் திருப்பூரில் தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.இந்நிலையில் கோவில் திருவிழாவிற்காக சில நாட்களுக்கு முன்பு வித்யாவும், காயத்திரியும் சொந்த ஊருக்கு வந்தனர்.

இதையடுத்து அவர்கள் தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.இதனால் சந்தேகமடைந்த அகிலாண்டேஸ்வரி, அவர்கள் 2 பேரிடமும் விசாரித்துள்ளார். அப்போது காங்கேயத்தை சேர்ந்த ஒரு வாலிபரை வித்யாவும், அதே பகுதியை சேர்ந்த மற்றொரு வாலிபரை காயத்திரியும் காதலித்து வருவதாக கூறியுள்ளனர்.

மகள்களின் காதல் விவகாரம் தெரியவந்ததையடுத்து, அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, 2 பேரையும் அகிலாண்டேஸ்வரி கண்டித்துள்ளார்.இந்நிலையில் நேற்று காலை இருவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாய் கண்டித்ததால் சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.அக்கா – தங்கையின் செல்போனை கைப்பற்றிய பொலிஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

related posts