நாட்டில் தற்போது 7 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாகவும், இது மொத்த மக்கள் தொகையில் 31 வீதம் எனவும் LIRNEasia வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமீபத்திய கணக்கெடுப்பின் முடிவுகளை முன்வைக்கும் போதே பிராந்திய சிந்தனைக் குழுவான LIRNEasia இதனைத் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (07) நடைபெற்ற வைபவம் ஒன்றில் இந்த சமீபத்திய ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது.
அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் வறுமையில் வாடுவதாக இனங்காணப்பட்ட 3 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 4 மில்லியனால் அதிகரித்துள்ளது.