Home கனடா ஆல்பர்ட்டா மாகாணத்தில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளது

ஆல்பர்ட்டா மாகாணத்தில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளது

by Jey

அண்மையில் அல்பர்ட்டா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியை ஈட்டியது.

இதன்படி ஆல்பர்ட்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் மீண்டும் முதல்வர் பதவிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 63 ஆசனங்களை பெற்றுக் கொண்ட ஸ்மித்தின் கட்சி இம்முறை 49 ஆசனங்களை பெற்றுக் கொண்டிருந்தது.

ஆட்சி அமைத்துள்ள ஐக்கிய கன்சர்வேட்டில் கட்சி இன்றைய தினம் தனது அமைச்சரவையை அறிவிக்க உள்ளது.

இம்முறை தேர்தலில் கட்சியின் சார்பில் வெற்றியீட்டிய அதிக எண்ணிக்கையிலானவர்கள் கிராமிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் தோல்வி அடைந்தமை அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டமை போன்ற பல காரணிகளினால் இம்முறை டேனியல் ஸ்மிதின் அமைச்சரவையில் அனுபவமும் திறமையும் கொண்ட அமைச்சர்களை நியமிப்பதில் சவால் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

related posts