செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முக்கிய பங்காற்றி வரும் அமெரிக்க நிறுவனமான OpenAI நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பின் சாம் ஆல்ட்மேன் தனது டுவிட்டரில் , “இந்தியாவில் ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்தும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்தியா எவ்வாறு பயனடைந்து வருகிறது என்பது குறித்தும் பிரதமர் மோடியுடன் மேற்கொண்ட உரையாடல் மிகச்சிறப்பாக இருந்தது. ” என தெரிவித்தார்.