மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிபவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவைபுரிபவர்கள் சிறப்பாக சேவைபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் தமிழக முதல்-அமைச்சரால் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.