Home உலகம் ரஷ்யாவால் தகர்க்கப்பட்டதாக கூறப்படும் கக்கோவ்கா அணை

ரஷ்யாவால் தகர்க்கப்பட்டதாக கூறப்படும் கக்கோவ்கா அணை

by Jey

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் உக்ரைனின் சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளன.

அதற்கமைய, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் கெர்சன் பகுதியில் கக்கோவ்கா அணை உடைக்கப்பட்டடு அங்கிருந்த நீர் மின் நிலையமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

அணை மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் உக்ரைன் நடத்திய தாக்குதலால் தான் அணைக்கட்டு உடைந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதற்கிடையே டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய அணையின் ஒரு பகுதி உடைந்ததால் சுமார் 18 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவால் தகர்க்கப்பட்டதாக கூறப்படும் கக்கோவ்கா அணை மீது நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வெடிகள் மிதப்பதாகவும், அதிகளவில் நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் உக்ரைன் துணைப் பிரதமர் ஒலெக்சாண்டர் குப்ராகோவ் எச்சரித்துள்ளார்.

முன்பு போடப்பட்ட கண்ணிவெடிகள் நீரில் தற்போது மிதந்து வந்து அவை வெடித்து சிதறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

related posts