Home உலகம் ட்ரம்ப் மீது குற்றசாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால்….?

ட்ரம்ப் மீது குற்றசாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால்….?

by Jey

அமெரிக்காவின் அணுசக்தி மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த இரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது 37 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் அவருக்கு எதிரான ஏழு குற்றசாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால் 100 வருடத்திற்கும் மேற்பட்ட சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

49 பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணத்தில், உளவுச் சட்டத்தை மீறுதல், தேசிய பாதுகாப்புத் தகவல்களை அங்கீகரிக்கப்படாத நபர்கள் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2021 ஜனவரி இல் அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியபோது, ​​பென்டகன், சிஐஏ, தேசிய பாதுகாப்பு ஏஜென்சி மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளின் ரகசிய ஆவணங்களை எடுத்து சென்றுள்ளார்.

மேலும் குறித்த ஆவணங்களை புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் பாதுகாப்பின்றி வைத்திருந்தார் என புளோரிடாவில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் இவ்வாறு குற்றசாட்டுகளை எதிர்கொள்வது இதுவே முதல் தடவையாகும்.

டொனால்ட் ட்ரம்ப் தலா 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய நான்கு வெவ்வேறு குற்றச்சாட்டுகளையும் 10 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படக்கூடிய ஒரு குற்றச்சாட்டையும் எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

 

 

 

 

 

 

 

 

 

related posts