Home கனடா முதல் முறையாக மே மாதத்தில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

முதல் முறையாக மே மாதத்தில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு

by Jey

கடந்த 9 மாதங்களில் முதல் முறையாக மே மாதத்தில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் கடந்த மே மாதத்தில் மட்டும் வேலையின்மை விகிதம் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022 ஆகஸ்டு மாதத்திற்கு பின்னர் வேலையின்மை விகிதம் அதிகரிப்பது இதுவே முதல் முறை.

பெடரல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில், மே மாதம் மட்டும் கனேடிய பொருளாதாரம் 17,000 வேலை வாய்ப்புகளை இழந்ததால் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் சிறிது மாற்றம் ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.

வேலையின்மை விகிதமானது முன்பு ஐந்து சதவீதமாக தொடர்ந்து ஐந்து மாதங்களுக்கு இருந்தது. உற்பத்தி, பயன்பாடுகள் மற்றும் பராமரிப்பு போன்ற சேவைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ள போதும், குறிப்பிட்ட சில துறைகளில் வேலைவாய்ப்பு சரிவடைந்தே காணப்பட்டுள்ளது.

இருப்பினும், மே மாதத்தில் ஊதிய உயர்வு என்பது தொடர்ந்துள்ளதாகவே கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், 5.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

related posts